இந்துத்துவாவை தலிபான்களுடன் ஒப்பிட்ட தனுஷ் பட கதாநாயகி..!

 
ஸ்வாரா பாஸ்கர்

தாலிபான்களுடன் இந்துத்துவாவை ஒப்பிட்டு பேசியதாக கூறி நடிகை ஸ்வரா பாஸ்கர் மீது பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்வாரா பாஸ்கர். தனுஷ் நடிப்பில் வெளியான ‘ராஞ்சனா’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களிடம் பிரபலமானார். தொடர்ந்து அவர் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் நிலவியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்வாரா பாஸ்கர், தலிபான் தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல இந்துத்துவா தீவிரவாதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மனிதாபினம் என்பது ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்குபவர்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கக் கூடாது என அவர் கூறியுள்ளார்.

ஸ்வாரா பாஸ்கரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய கருத்து நாட்டின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக கூறி கைது செய்ய பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுதொடர்பாக ஸ்வாரா பாஸ்கர் எவ்வித கருத்தும் தெரியாமல் இருக்கிறார்.
 

From Around the web