நாளை வெளியாகும் ’ஜகமே தந்திரம்’ பட டிரெய்லர்- தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

 
ஜகமே தந்திரம் பட டிரெய்லர்

‘ஜகமே தந்திரம்’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் தெரிவித்துள்ளதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வரும் ஜூன் 18-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து, அவருடைய மருமகன் நடித்துள்ள படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். அதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நடிகர் தனுஷ் இந்த படத்தில் சுருளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும் கலையரசன், வடிவுக்கரசி ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக நடித்துள்ளார்

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரகிட ரகிட’, ‘புஜ்ஜி’ போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ‘நேத்து’ பாடலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் 18-ம் தேதி இந்த படம் வெளிவரவுள்ளது. அதற்கு முன்னதாக நாளை ஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியாகவுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

From Around the web