விடுதலை படத்தில் சூரிக்கு குரல் கொடுத்த தனுஷ்..!

 
விஜய் சேதுபதி, சூரி மற்றும் தனுஷ்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ படத்தில் தனுஷும் பணியாற்றியுள்ள விபரம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் ‘விடுதலை’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கேற்றவாறு படத்தின் சில ஷூட்டிங் புகைப்படங்கள் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

வெற்றிமாறன் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அப்போது முதல் தனுஷ் உடனான அவருடைய நட்பு தொடர்ந்து வருகிறது. ஒன்று வெற்றிமாறன் படத்தின் ஹீரோவாக தனுஷ் இருப்பார், இல்லையென்றால் வெற்றிமாறன் இயக்கும் படத்தை தனுஷ் சொந்தமாக தயாரிப்பார்.

அந்த வகையில் முதன்முறையாக தனுஷின் பங்களிப்பு இல்லாமல் வெற்றிமாறன் விடுதலை படத்தை எடுத்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த கருத்து தற்போது மாற்றிக்கொள்ளப்பட்டுள்ளது. விடுதலை படத்திலும் தனுஷ் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். அதன்படி விடுதலை படத்துக்காக இசையமைத்து வரும் இளையராஜா இசையில் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ள விவரம் வெளியாகியுள்ளது.

விடுதலை படம் ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்கிற சிறுகதையை தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அடுத்தாண்டு இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web