ட்விட்டரில் ஒரு கோடி ஃபாலோயர்ஸுகளை கடந்த முதல் தமிழ் நடிகர் தனுஷ்..!

 
தனுஷ்

தமிழ் சினிமாவில் 10 மில்லியன் ஃபாலோயர்ஸுகளை கொண்ட முதல் நடிகர் என்கிற மைல்கல்லை எட்டியுள்ளார் தனுஷ்.

உடன் பிறந்த சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படம் மூலம் சினிமாவில் கால்பதித்தவர் தனுஷ். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், தனுஷ் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘காதல் கொண்டேன்’ படம் வெளியாகி அவர் மீதான பார்வையை மாற்றியது.

அதை தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார் தனுஷ். இந்தி, ஆங்கிலம் மொழி படங்களிலும் அவர் நடித்தார். அனிருத் இசையில் 3 படத்துக்காக அவர் பாடிய ‘ஒய் திஸ் கொலவெறி’ என்கிற பாடல் தனுஷை உலகளவில் பிரபலமாக்கியது. தன்னுடைய நடிப்புக்காக இரண்டு முறை தேசிய விருதுகளும் அவர் பெற்றுள்ளார்.

பல்வேறு மொழிப் படங்களில் தனுஷ் நடித்து வருவதால் அவருக்கான ரசிகர் வட்டம் அதிகரித்து வருகிறது. இதனுடைய தாக்கம் சமூகவலைதளங்களில் எதிரொலிக்க துவங்கியுள்ளது. அதன்படி, தனுஷின் ட்விட்டர் ஃபோலோயர்ஸ் எண்ணிக்கை ஒரு கோடியாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் சினிமாவில் 10 மில்லியன் ஃபாலோயர்ஸுகளை கடந்த முதல் தமிழ் நடிகர் என்கிற பெருமையை தனுஷ் அடைந்துள்ளார்.

From Around the web