செல்வராகவனை தொடர்ந்து அருண் மாதேஸ்வரனுடன் கைக்கோர்க்கும் தனுஷ்..!

 
செல்வராகவனை தொடர்ந்து அருண் மாதேஸ்வரனுடன் கைக்கோர்க்கும் தனுஷ்..!

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘நானே வருவேன்’ படத்தை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கர்ணன் படம் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்துள்ள படங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் அடுத்ததாக வெளிவரவுள்ளது. ஆனால் இது நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

இதை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. தற்போது அவர் ஹாலிவுட் படத்தில் நடித்து வருவதால், அது முடிந்த பிறகு கார்த்திக் நரேன் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இந்தியில் அவர் நடித்து முடித்துள்ள ‘அத்திரங்கி ரே’ படம் வெளிவரவுள்ளது. இது பாலிவுட் சினிமாவில் தனுஷ் நடிக்கும் மூன்றாவது படமாகும். இந்த படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கொண்ட படங்களை முடிக்கும் தனுஷ், அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படத்திற்கு தேதி ஒத்துக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘சாணிக் காகிதம்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

ஒருவேளை அருண் மாதேஸ்வரன் மற்றும் தனுஷ் கூட்டணி உறுதி செய்யப்படும் பட்சத்தில், இது தனுஷ் நடிக்கும் 47-வது படமாக தயாராகவுள்ளது. இந்த படத்தை சத்ய ஜோதி ஃப்லிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் டி 40 படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

From Around the web