விஜய் சேதுபதியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் தனுஷ்..!

 
விஜய் சேதுபதியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் தனுஷ்..!

தமிழ் சினிமாவில் இதுவரை விஜய் சேதுபதிக்கு மட்டுமே கிடைத்து வந்த சிறப்பு முதன்முறையாக தனுஷுக்கு கிடைத்துள்ளது. இதுதொடர்பான விபரங்களை விரிவாக பார்க்கலாம்.

ஆண்டுதோறும் தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடிக்கும் நடிகராக இருந்து வந்தார் விஜய் சேதுபதி. ஒராண்டில் இவர் மட்டும் அதிகப்பட்சமாக 10 படங்கள் வரை நடித்துக் கொண்டிருப்பார். ஆனால் இந்தாண்டில் அந்த சாதனையை தனதாக்கி கொண்டுள்ளார் நடிகர் தனுஷ்.

தமிழில் கர்ணன் படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்து வந்தார் தனுஷ். ஆனால் அதற்குள் அவருக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துவிட, அந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங்கை முடித்துவிட்டு அமெரிக்கா சென்றார். விரைவில் இந்தியா வரவுள்ள அவர் கார்த்திக் நரேன் படத்தின் இரண்டாம் கட்ட  படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். சத்யஜோதி ஃபில்ம்ஸ் தயாரிக்கும் இந்த  படம் டி43 என்று குறிப்பிடப்படுகிறது.

அதை தொடர்ந்து தனுஷின் 44-வது படமாக உருவாகிறது நானே வருவேன். இதை அவருடைய மூத்த சகோதரர் செல்வராகவன் இயக்கவுள்ளார். அமெரிக்காவில் இருந்து தனுஷ் திரும்பியவுடன் இந்த படத்தின் பணிகள் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த படத்திற்கு பிறகு முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களை இயக்கிய ராம் குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனுஷ் நடிக்கிறார். அதை தொடர்ந்து சாணிக் காகிதம் படத்தை இயக்கி வரும் அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்திலும் தனுஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் இந்தாண்டு மட்டுமில்லாமல் அடுத்தாண்டு வரை தனுஷ் கால்ஷீட் முற்றிலுமாக முழுமை அடைந்துள்ளது. இதற்கிடையில் தி கிரே மேன் படத்தில் நடிக்க அவ்வப்போது அவர் ஹாலிவுட் சென்று வரவேண்டும். இந்த படம் மூன்று பாகங்கள் கொண்ட படமாக தயாராவது குறிப்பிடத்தக்கது. 
 

From Around the web