அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார் தனுஷ்- ஹைதராபாத்தில் தஞ்சம்..!
 

 
நடிகர் தனுஷ்

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்த நடிகர் தனுஷ், நேராக ஹைதராபாத்தில் நடைபெறும் டி 43 படத்திற்கான ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.

ஹாலிவுட்டில் தயாராகி வரும் ‘தி கிரே மேன்’ பட ஷூட்டிங்க் முடிவடைந்ததை தொடர்ந்து நடிகர் தனுஷ் இந்தியா திரும்பினார். அவர் அமெரிக்கா சென்ற போது உடன் மனைவி மற்றும் மகன்களை அழைத்துச் சென்றார். ஆனால் ரஜினிகாந்த் உடல்நல சிகிச்சைக்காக அங்கு சென்றுள்ளார். அவருடன் மகள் ஐஸ்வர்யா மற்றும் பேரன்கள் இருக்கின்றனர். தற்போது தனுஷ் மட்டும் இந்தியா திரும்பியுள்ளதாக தெரிகிறது.

இந்தியா திரும்பியவுடன் ஹைதராபாத்துக்கு சென்றுவிட்டார் தனுஷ். கார்த்திக் நரேன் இயக்கத்தில் அங்கு துவங்கியுள்ள ‘டி 43’ படத்திற்கான படப்பிடிப்பில் பங்கேற்கிறார். இதற்கான ஷூட்டிங் பணிகள் ராமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் நடைபெறவுள்ளது. இதில் மாளவிகா மோகனன் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தனுஷ் அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக இப்படத்தின் முதல் ஷெட்யூல் முடிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் இரண்டாம் கட்ட ஷெட்யூல் விரைவிலேயே முடிக்கப்படுகிறது. அதை தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்தில் நடிக்கவுள்ளார். அதனுடைய ஷூட்டிங் ஆகஸ்டு மாதம் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From Around the web