தனுஷுடன் நடிக்க மறுத்த பாலிவுட் சர்ச்சை நாயகி..!!
திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார். இது அவருடைய 50-வது படமாக தயாராவதால், படத்துக்கு டி50 என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தை நடிகர் தனுஷே இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அவர் இயக்கத்தில் வெளியான ‘பா. பாண்டி’ படத்தில், தனுஷ் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டி50 படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு படக்குழு இந்தி சினிமா நடிகை கங்கனா ரணாவத்தை அணுகியுள்ளது. ஆனால் சில காரணங்கள் அவர் படத்தில் நடிக்க மறுத்துள்ளார். அதுகுறித்து தெளிவான விளக்கம் எதுவும் வெளியாவில்லை.

இதற்கு பிறகு தான் டி50 பட நாயகியாக படக்குழு த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த 2016 -ம் ஆண்டு கொடி படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் டி50 தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 - cini express.jpg)