ரூ. 100 கோடி பட்ஜெட்டில் D50 படம் இயக்கும் தனுஷ்..!!

கேப்டன் மில்லர் படத்துக்கு பிறகு தனுஷ் நடிக்கும் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
 
dhanush

திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் தனுஷ் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக படம் நடிப்பதாக இருந்தது. அதற்கான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்ட நிலையில், படத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தாமதமாகி வந்தன.

தற்போது தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அது முடிந்ததும் அவர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தனுஷின் 50-வது படமாக தயாராகவுள்ளது. அதில் ஹீரோவாக நடிப்பது மட்டுமில்லாமல், அந்த படத்தை அவர் தான் இயக்கவுள்ளதாகவும் தெரிகிறது. தனுஷ் இயக்கத்தில் முதன்முதலாக வெளியான ‘பவர் பாண்டி’ திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

புதியதாக உருவாகவுள்ள டி50 படத்தில்  எஸ்.ஜே. சூர்யா மற்றும் சந்தீப் கிஷன் தனுஷுக்கு சகோதர்களாக நடிக்கின்றனர். காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

டி50 வட சென்னையை பற்றிய படமாக உருவாகவுள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளார். விரைவில் கேப்டன் மில்லர் படம் முடிவுக்கு வரும் என்றும், அதை தொடர்ந்து டி50 படப்பிடிப்பு துவங்கும் என்று தகவல்கள் தெரியவந்துள்ளன.
 

From Around the web