தனுஷ் - செல்வராகவன் பட கதையும் மாற்றம்... தலைப்பும் மாற்றம்..!

 
நானே வருவேன் படம்

நீண்ட நாட்களுக்கு பிறகு செல்வராகவன் மற்றும் தனுஷ் இணைந்துள்ள படத்திற்கு ‘நானே வருவேன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படத்தின் கதையும் தலைப்பும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் இருந்து தனுஷ் திரும்பி வந்ததும், படத்தின் கதையில் செல்வராகவன் மற்றும் தனுஷுக்கு இடையே கருத்து மோதல் எழுந்ததாக தகவல் வெளியானது. இதனால் நானே வருவேன் படம் கைவிடப்பட்டு, வேறு ஒரு கதையை செல்வராகவன் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

அண்ணன், தம்பிக்கு இடையே நடக்கும் சம்பவங்களை மையப்படுத்திய கதையாக இப்படம் உருவாகவுள்ளது. அதன்படி படத்தில் தனுஷ் அண்ணாக நடிக்கிறார் என்றும், தம்பி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விஷ்ணு விஷாலிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் இந்த படத்தை குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ‘நானே வருவேன்’ படத்துக்கு ஆகஸ்டு முதல் படப்பிடிப்பு நடக்கும் என்று கூறப்பட்டது. 

தற்போது தனுஷ் - செல்வராகவன் வேறு ஒரு கதையில் உடன்படிக்கை செய்துள்ளதால், அவரும் செப்டம்பர் மாதம் முதல் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர். முன்னதாக படத்தில் நடிப்பதற்கான நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

From Around the web