நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு..?

 
1

மைக்கேல் ராயப்பன் பிரச்னையை மேற்கோள்காட்டி சிம்புக்கு ரெட் கார்டு நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளது. நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது சங்க பணத்தை முறையாக கையாளவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் 80% படப்படிப்பு முடிந்தநிலையில், படப்பிடிப்புக்கு வராமல் நஷ்டம் ஏற்படுத்தியதால் தனுஷ்க்கு ரெட் கார்டு நோட்டீஸ் வழங்கப்படவுள்ளது. தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில் நடிகர் அதர்வா முறையாக பதிலளிக்காததால் ரெட் கார்டு வழங்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு ஏற்கனவே பல முறை புகார்கள் எழுந்து பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நோட்டீஸுக்கு பிறகும் மேற்கண்ட நடிகர்கள், இதுபோன்ற தவறுகளை தொடர்ந்து செய்தால் அவர்கள் உடன் இனி எந்த தயாரிப்பாளரும் பணியாற்ற கூடாது என முடிவெடுத்து இருப்பதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

From Around the web