பிரபல நடிகர்கள் தனுஷ் சிம்பு விஷாலுக்கு ரெட் கார்டு ?

 
1

 கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல், நஷ்டம் ஏற்படுத்திய சில நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது. மேலும் இந்த லிஸ்டில், தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, அமலா பால், வடிவேலு, ஊர்வசி, சோனியா அகர்வால், அதர்வா உள்ளிட்ட 14 நடிகர்கள் உள்ளதாக கூறப்பட்டது.

TFPC

இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செயற்குழு நேற்று நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு ஒரு சில முடிவுகளை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் நடிகர்களின் தரப்பில் உள்ள விளக்கங்களை கேட்ட பின்னர் தற்போது, 4 முன்னணி நடிகர்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் வழங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிம்பு மீது ஏற்கனவே பலமுறை புகார் அளித்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவடையாத மைக்கேல் ராயப்பன் பிரச்சனையை, மேற்கோள்காட்டி சிம்புக்கு ரெக்கார்ட் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது... நடிகர்  சங்க பணத்தை முறையாக கையாளாது தொடர்பாக விஷாலுக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Simbu-Vishal

நடிகர் தனுஷ் தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், 20 சதவீத படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக ரெக்கார்ட் போடப்பட்டுள்ளது. நடிகர் அதர்வா, தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில், முறையாக பதிலளிக்காமல் தொடர்ந்து நழுவி வருவதால் அதர்வாவுக்கும் ரெக்கார்ட் வழங்க பட்டுள்ளது. இந்த சம்பவம் தென்னிந்திய திரையுலகில் பரபரப்பை ஏற்புடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web