மொட்டை தலையுடன் தனுஷ் நடிக்கும் டி-50 பட ஷுட்டிங் இன்று தொடக்கம்..!!
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான படப்பிடிப்பு கடந்த வாரத்துடன் முடிக்கப்பட்டது.
இதையடுத்து திருப்பதி சென்ற அவர், கேப்டன் மில்லர் படத்துக்காக தான் வளர்த்த தாடி, நீண்ட முடி, மீசை உள்ளிட்டவற்றை நேர்த்திக் கடனாக வழங்கினார். அவருடன் இரு மகன்களும் மொட்டைப் போட்டுக் கொண்டனர்.
மொட்டைத் தலையுடன் தனுஷ் திருப்பதி கோயில் பிரகாரங்களில் வலம் வரும் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகின. இந்நிலையில் இப்புதிய கெட்-அப் அடுத்து தனுஷ் நடிக்கும் 50-வது படத்துக்கு என்று சொல்லப்பட்டது.

தற்போது அதை உறுதி செய்யும் விதமாக டி50 படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்குகிறது. இதற்காக சென்னை இ.சி.ஆரில் 500 வீடுகள் கொண்ட பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பூஜை போடப்பட்டு முதல் காட்சி படமாக்கப்படவுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் டி50 படத்தில் நடிப்பது மட்டுமின்றி, தானே இயக்கவும் செய்கிறார் தனுஷ். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராமன், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
 - cini express.jpg)