தனுஷ் நடித்த ராயன் படம் 100 கோடி வசூல் என்பதெல்லாம் பொய் - பிரபல தயாரிப்பாளர் கே ராஜன்..! 

 
1
தனுஷ் நடித்து இயக்கிய ’ராயன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது என்பதும் ஆனால் அதே நேரத்தில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டதை சினிமா ரசிகர்கள் நம்பவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஏனெனில் இந்த படம் குறித்து பல விஷயங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்தாலும் இதுவரை வசூல் குறித்த எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை. ’ஜெயிலர்’ படம் வெளியான போது ஒவ்வொரு வாரமும் வசூல் குறித்த தகவலை அறிவித்த நிலையில் ’ராயன்’ படத்திற்கு அதிக வசூல் செய்ததாக மட்டுமே குறிப்பிட்டுள்ளது என்பதும் வசூல் தொகையை குறிப்பிடாததால் இந்த படம் 100 கோடி வசூல் செய்திருக்குமா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் இந்த படம் குறித்து கூறியபோது படத்தின் ரிசல்ட் சுமாராக தான் இருந்தது என்றும் முதல் நாளில் இருந்தே திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகள் எதுவும் ஓடவில்லை என்றும் எனவே இந்த படம் 100 கோடி வசூல் என்பதெல்லாம் பொய் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி சினிமா ரசிகர்களுக்கு தற்போது தனுஷ் மீதான இமேஜ் குறைந்துவிட்டது என்றும் அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கம் இல்லாமல் இருப்பது, மனைவியை பிரிந்து வாழ்வது ஆகியவை காரணமாக அவரது படங்களை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் தனுஷ் ஒரு திறமையான நடிகர் மற்றும் இயக்குனர் என்பது நிரூபிக்கப்பட்டது என்பதும் அவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சினிமா வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை என்றும் தனுஷின் திறமைகளை மதித்து அவரை வாழ்த்துவதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web