ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் தனுஷ்..?

 
ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் தனுஷ்..?

நடிகர் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை அவருடைய மருமகனும் நடிகருமான தனுஷ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் இதற்கான தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் ‘அண்ணாத்த’. இதில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இதனுடைய இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த ஒரு மாத காலமாக ஹைதராபாத்தில் நடைபெற்றது. கொரோனா பரவலுக்கு இடையில் இரவு பகலாக நடைபெற்ற ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் பங்கேற்று வந்தார்.

சமீபத்தில் ஷூட்டிங் நிறைவடைந்ததை அடுத்து சென்னை திரும்பினார். தற்போது கொரோனாவுக்கான தடுப்பூசி எடுத்துக் கொண்டு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் தற்போது அமெரிக்காவில் படப்பிடிப்பி ஈடுபட்டு வருகிறார்.

விரைவில் அவர் சென்னை திரும்பவுள்ள நிலையில், அதையடுத்து உடனடியாக ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கான பணிகளை அவர் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாத்த படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு அவல்பொறி கிடைத்தது போல இந்த செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அண்னாத்த படத்தின் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, இந்தாண்டு தீபாவளிக்குள் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

From Around the web