தி கிரே மேன் ஷூட்டிங் நிறைவடைந்தது- விரைவில் சென்னை திரும்பும் தனுஷ்..!

 
தி கிரே மேன் திரைப்படம்

ஹாலிவுட்டில் தயாராகி வந்த ‘தி கிரே மேன்’ ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் நடிகர் தனுஷ் விரைவில் சென்னை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவெஞ்சர்ஸ் பட புகழ் ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘தி கிரே மேன்’. நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ரயான் கோஸ்லிங், கிறிஸ் ஈவென்ஸ், தனுஷ், ஜெசிகா ஹென்விக், வாக்னர் ஹென்விக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கிட்டத்தட்ட ஓராண்டாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனால் நடிகர் தனுஷ் அமெரிக்காவில் இருந்து விரைவில் இந்தியா திரும்பவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனுஷ் சிறிது காலம் அங்கே இருக்கக்கூடும் என்று தெரிகிறது. இல்லையென்றால் ஐஸ்வர்யா தனுஷ் ரஜினிகாந்துடன் தங்கலாம் என்று சொல்லப்படுகிறது.

விரைவில் தனுஷ் இந்தியா திரும்பியதும் கார்த்திக் நரேன் படத்திலும், செல்வராகவனின் ‘நானே வருவேன்’ படத்திலும் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

From Around the web