தயாரிப்பாளர் சங்க தடையால் தனுஷ் அதிரடி முடிவு..!
Aug 8, 2024, 09:05 IST
தனுஷ் நடித்த ’ராயன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் அடுத்ததாக எந்த தமிழ் தயாரிப்பாளர் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. தனுஷ் நடித்து வரும் ’குபேரா’ திரைப்படம் கூட தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் தெலுங்கு இயக்குனர் படம் என்றும், அதேபோல் ‘இளையராஜா’ படத்தை தயாரிப்பதும் தெலுங்கு திரைப்பட நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் மேற்கண்ட படத்திற்கு தடை விதிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி பாலிவுட்டில் ஆனந்த் என் ராய் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளது. மேலும் ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க தனுஷ் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக கூறப்படும் நிலையில் பாலிவுட் படத்தை முடித்துவிட்டு அவர் ஹாலிவுட் செல்ல உள்ளார்.
அது மட்டும் இன்றி தனுஷ் நடிக்கும் அடுத்தடுத்த படங்களை தயாரிக்கவும் இயக்கவும் தெலுங்கு தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தயாராக இருப்பதாக கூறப்படுவதால் தமிழ் தயாரிப்பாளர்கள் இனி தனக்கு தேவையில்லை என்ற முடிவை தனுஷ் எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.