பாக்ஸ் ஆபிஸ் வேட்டையில் தனுஷின் வாத்தி..!! 

 
1

முதல் முறையாக ‘வாத்தி‘ படத்தின் மூலம் நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் வாத்தியராக நடித்துள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், கென் கருணாஸ், சமுத்திரக்கனி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

கடந்த வாரம் வெளிவந்த வாத்தி.படம் மூன்றே நாட்களில் ரூ. 51 கோடி வசூல் செய்துள்ளது. இதனை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், வாரிசு படம் தெலுங்கில் செய்த வசூலைவிட அதிக வசூலை வாத்தி படம் முறியடித்துவிடும் என்று கூறப்படுகிறது.

இன்னும் சில நாட்களில் வாரிசு பட வசூலை வாத்தி படம் நிச்சயம் முறியடித்து விடும் என்று வாத்தி படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.

1

 தமிழகத்தில் முதல் நாளில் 5.44 கோடியும், அதற்கு இணையாக தெலுங்கில் 4.52 கோடியும் வசூலித்துள்ளது. அதேபோன்று கர்நாடகாவில் 1.25 கோடியும், கேரளாவில் 0.2 கோடியும், வெளிநாட்டில் 3.25 கோடியும் வசூலித்துள்ளது. ஒட்டுமொத்தமாக முதல் நாளில் உலக அளவில் 14.85 கோடி வசூலித்திருந்தது. இந்நிலையில் ‘வாத்தி’ திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படம் உலகம் முழுவதும் 3 நாளில் 51 கோடி வசூலித்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.  

 

From Around the web