தனுஷின் ஜகமே தந்திரம் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 
தனுஷின் ஜகமே தந்திரம் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ள ஜகமே தந்திரம் படம் நேரடியாக ஓ.டி.டி-யில் ரிலீஸாகும் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

கொரோனா முதல் அலைக்கு முன்னதாக ஜகமே தந்திரம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. ஆனால் மார்ச் இறுதி வாரத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக படத்தை திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.

ஊரடங்கு காலத்தில் ஜகமே தந்திரம் படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிக்கப்பட்டு திரையரங்குகள் திறந்தவுடன் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருந்ததால் ஜகமே தந்திரம் படம் நேரடியாக ஓ.டி.டியில் ரிலீஸாகும் என்கிற அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.

ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு வெளியான கர்ணன் படம் அமோக வரவேற்பை பெற்றது. ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நேரத்தில் கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமடைய தொடங்கியது. இதனால் மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டன. எனினும் கர்ணன் படம் எதிர்பார்த்ததை விட நல்ல வசூல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன்காரணமாக பொறுத்திருந்து பார்த்த தயாரிப்பு நிறுவனம் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்துவிட்டது. அதன்படி வரும் ஜூன் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் ‘ஜகமே தந்திரம்’ படம் வெளிவரவுள்ளது. தற்போது அமெரிக்காவில் ஹாலிவுட் பட படப்பிடிப்பில் இருக்கும் தனுஷ் விரைவில் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web