தனுஷின் குபேரா படம் ரிலீஸ் குறித்த அப்டேட்..!
Oct 27, 2024, 08:05 IST
தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'குபேரா', இப்படத்தின் அறிவிப்பு கடந்த வருடம் ஜுலை மாதம் வெளியானது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது தனுஷின் 51வது படமாக ஆரம்பமான இப்படத்திற்கு மார்ச் மாதம் 'குபேரா' என தலைப்பை அறிவித்தார்கள். அப்போது முதல் போஸ்டரையும் வெளியிட்டார்கள் தொடர்ந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா ஆகியோரது முதல் போஸ்டர்களும் வெளியானது.
2025ம் ஆண்டு இப்படம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அடுத்த வாரம் தீபாவளிக்கு படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளார்களாம். இதனால் ரசிகர்கள் குஷியில் உள்ளார்கள்.