ஓ.டி.டி-யில் வெளியாகும் தனுஷ் மூன்றாவது இந்திப் படம்..!

 
அத்திரங்கி ரே

மீண்டும் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மூன்றாவது இந்திப் படம் நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா காரணமாக திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்ந்து வருகின்றன. இதன்காரணமாக பான் இந்தியாவை குறிவைத்து எடுக்கப்பட்ட படங்களின் ரிலீஸ் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. எனினும் சூரரைப் போற்று, மிமி, ஜகமே தந்திரம் போன்ற படங்கள் நேரடியாக ஓ.டி.டி-யில் ரிலீஸாகின.

இந்த வரிசையில் தேசியளவிலான சந்தையை குறிவைத்து எடுக்கப்பட்ட படம் ‘அந்தரங்கி ரே’. தனுஷ், அக்சய் குமார், சாரா அலிகான் போன்றோர் இணைந்த நடித்த இப்படமும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட இருந்தன.

ஆனால் நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தனுஷின் ஜகமே தந்திரம் படமும் ஓடிடியில் நேரடியாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

From Around the web