இணையத்தில் பட்டைய கிளப்பும் தனுஷ் பட ட்ரைலர்..!! 

 
1

திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்து வரும் படம் ‘வாத்தி’. இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

Vathi

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த 4-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் தனுஷ், இயக்குநர் வெங்கி அட்லூரி, நடிகை சம்யுக்தா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், ‘வாத்தி’ படத்தின் டிரெய்லர் நேற்று  (பிப். 8) மாலை 6.30 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

From Around the web