தமிழும் சரஸ்வதியும் சீரியல் இருந்து வெளியேறிய தர்ஷனா..!!

தமிழ் குடும்பங்கள் கொண்டாடும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் இருந்து தர்ஷனா விலகியுள்ளதால் அவருடைய கதாபாத்திரத்தில் நடிப்பவர் குறித்த விபரம் தற்போது தெரியவந்துள்ளது.
 
dharshana

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு என்று தனி ரசிகர் வட்டம் உண்டு. அந்த் வரிசையில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் வரவேற்பு பெற்ற தொடர்களில் ஒன்று தமிழும் சரஸ்வதியும். இந்த தொடரில் தீபக் மற்றும் நக்‌ஷத்ரா இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருக்கின்றனர்.

வில்லனான அர்ஜுன் உடன் ஏற்படும் பிரச்னைகளை சமாளித்து எப்படி தமிழ் தனது வாழ்க்கையில் வெற்றி அடைகிறான் என்பது தான் தொடரின் முக்கிய பகுதியாகும். அதேசமயத்தில் தமிழ் தனது தாயிடமும் ஒரு சவால் விட்டுள்ளான். அதில் எவ்வாறு அவன் வெற்றி அடைகிறான் என்பது கதையில் முக்கிய கட்டமாக உள்ளது.

dharshana

இந்த சீரியல் வில்லயாக இருந்த சந்திரலேகா நல்லவராக மாறிவிட்டார். இதனால் சீரியல் முடிந்துவிடுமா என்கிற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. எனினும், இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் எதுவும் தகவலை வெளியிடவில்லை. இதற்கிடையில் சீரியலில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தரா கதாபாத்திரத்தில் நடித்து வந்த தர்ஷனா நாடகத்தில் இருந்து விலகிவிட்டார். அதன்படி இனி வரும் எபிசோடுகளில் புதிய வசுந்தரவாக நடிப்பவரின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இனிமேல் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தரா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்வர் சங்கீதா என்பவர். இவர் குறித்த விபரங்கள் விரைவில் சேகரித்து உங்களுக்காக வெளியிடுகிறோம்.

 

 

From Around the web