தோனி தயாரிக்கும் எல்.ஜி.எம் படத்தின் முக்கிய அப்டேட்..!!

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தயாரிப்பில் உருவாகி வரும் ’லெஸ்ட் கெட் மேரிட்’திரைப்படம் தொடர்பாக முக்கிய அப்டேட் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
lgm movie

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி மற்றும் அவருடைய மனைவி சாக்‌ஷி தோனி இருவரும் சேர்ந்து துவங்கி இருக்கும் நிறுவனம் தோனி எண்டர்டெயின்மெண்ட். இந்நிறுவனத்தின் முதல் படம் தமிழில் தயாராகி வருகிறது. 

எல்.ஜி.எம் (’லெஸ்ட் கெட் மேரிட்’) என்கிற பெயரில் உருவாகி வரும் படத்தில் ஹரீஷ் கல்யான் மற்றும் இவானா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அவர்களுடன் நதியா, வினோதினி வைத்தியநாதன், ஸ்ரீநாத், மோகன் வைத்தியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இது தொடர்பாக தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், இந்தத் திரைப்படம் கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியின் முதல் தயாரிப்பாகும். எம். எஸ். தோனி மற்றும் சாக்ஷி தோனியின் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்

எல் ஜி எம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். இதற்காக படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் கலந்து கொண்ட பிரத்யேக நிகழ்வும் நடைபெற்றது. இதன் போது படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞர்களும் தங்களின் மகிழ்ச்சியை கொண்டாட்ட மனநிலையில் பகிர்ந்து கொண்டனர். படத்தின் பணிகள் தொடங்கப்பட்ட நாளிலிருந்து படப்பிடிப்பு நிறைவடையும் நாள் வரை முழு செயல்முறையும் விரிவான முறையில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டிருக்கிறது

தற்போது இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் டீசர், ட்ரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் பட வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From Around the web