துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் கூட்டணி: வெளியானது புதிய அப்டேட்..!

 
இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா. ரஞ்சித்துடன் நடிகர் துருவ் விக்ரம்

இயக்குநர் ரஞ்சித் தயாரிப்பில் மாரில் செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை குறித்த முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழில் ஆதித்யா வர்மா படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் துருவ் விக்ரம். அதை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் விக்ரம் 60 படத்தில் தந்தை விக்ரமுடன் இணைந்து நடித்து வருகிறார்.

அதை தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். இதை மாரி செல்வராஜ் இயக்குகிறார். கார்த்திக் சுப்புராஜ் படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதை அடுத்து, இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகிறது. வரும் ஆகஸ்டு மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. அதை தொடர்ந்து படத்தில் பணியாற்றும் முக்கிய கலைஞர்களின் விபரம் வெளியாகும்.

From Around the web