துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் காம்போவில் வெளியாகும் படத்தின் தலைப்பு இதோ..! 

 
1

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் துருவ் விக்ரம்.இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மகான்.

கார்த்திக் சுப்ராஜ் இயக்கிய இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து துருவ் விக்ரம் இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் .

பா. ரஞ்சித் மற்றும் Applause நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் துருவ் விக்ரம் அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

கபடியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்காக துருவ் விக்ரம் முறையான பயிற்சியை நீண்டகாலமாக மேற்கொண்டு வருகிறார் .

நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது வந்துள்ள இந்த தகவல் சினிமா ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.

இப்படத்தின் பூஜை இன்று சிறப்பாக தொடங்கி உள்ள நிலையில் படத்திற்கு பைசன் என பெயரிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தின் பூஜையில் கலந்துகொண்ட நடிகர் விக்ரம் கிளப் போர்டு அடித்து படிப்பிடிப்பை தொடக்கி வைத்துள்ளார்.

From Around the web