காதலில் விழுந்தாரா அம்மு அபிராமி.. வீடியோ வெளியிட்டு கன்பர்ம்..!

 
1

நடிகை அம்மு அபிராமி, விஜய் நடித்த ’பைரவா’ என்ற திரைப்படத்தில் மெடிக்கல் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். அதன் பிறகு அவர் பல திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்த நிலையில் ’ராட்சசன்’ திரைப்படத்தில் தான் அவருக்கு அம்மு என்ற சூப்பர் கேரக்டர் கிடைத்தது. அந்த கேரக்டர் மூலம் அவர் பிரபலமானார்.

அதன் பிறகு ’துப்பாக்கி முனை’ ’அசுரன்’ ’தம்பி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நிலையில் தனுசுடன் நடித்த ’அசுரன்’ திரைப்படத்தில் அவர் நடித்த மாரியம்மாள் கேரக்டர் ரசிகர்கள் மனதை கவர்ந்தது. இந்த நிலையில் தற்போது அவர் ’கனவு மெய்ப்பட’ ’யார் இவர்கள்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இன்னும் சில பட ங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் அவருக்கு விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் மூன்றாவது இடத்தை பிடித்த அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிலையில் குக் வித் கோமாளி இயக்குனர் பார்த்திபன், அம்மு அபிராமியை காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் நேற்று பார்த்திபனின் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்துக்களை கூறி அவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவையும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்த போது ’காதலை உறுதிப்படுத்தியதற்கு நன்றி’ என்றும் ’நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து சந்தோஷமாக இருக்கிறது’ என்றும் ’வாழ்த்துக்கள்’ என்றும் பலர் பதிவு செய்து வருகின்றனர்.

அம்மு அபிராமி, பார்த்திபன் ஆகிய இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படையாக இன்னும் உறுதி செய்யவில்லை என்றாலும் இந்த வீடியோ மூலம் மறைமுகமாக அவர்கள் தங்களது காதலை தெரியப்படுத்தி உள்ளார்கள் என்று கூறப்பட்டு வருகிறது.

From Around the web