அரைகுறை பெண்ணுக்கு போன் நம்பர் கொடுத்தாரா ‘எதிர் நீச்சல்’ நடிகர் மாரிமுத்து...?

 
1

2000-ல் வெளியான ‘கண்ணும் கண்ணும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரிமுத்து. அதனைத் தொடர்ந்து, விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா உள்ளிட்ட நட்சித்திரங்களை வைத்து ‘புலிவால்’ என்ற திரைப்படத்தையும் இயக்கினார். அதற்கு முன்பு, இயக்குநர்கள் வசந்த், எஸ்.ஜே.சூர்யா, மணிரத்னம், சீமான் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

வசந்த்திடம் ஆசை,ரிதம் உள்ளிட்ட நான்கு படங்களிலும், எஸ்.ஜே.சூர்யாவிடம் வாலி படத்திலும், சீமானின் முதல் படமான பாஞ்சாலாங்குறிச்சியிலும், மணிரத்னத்திடம் பாம்பே உள்ளிட்ட படத்திலும் வேலை செய்திருக்கிறார் மாரிமுத்து. அதுமட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார்.

Marimuthu

இந்த நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஆதி குணசேகரன் என்ற வேடத்தில் மாரிமுத்து கலக்கி வருகிறார். ஸ்லாங்கில் அவர் பேசும் விதம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்நிலையில் ட்விட்டரில் ஆபாச ட்வீட்களுடன் இருக்கும் போலி கணக்கு ஒன்று, மார்டன் உடை அணிந்த பெண் புகைப்படத்துடன் ‘Can I Call You’ என நடிகர் மாரிமுத்து என்று பெயருள்ள போலி ட்விட்டர் கணக்கை குறிப்பிட்டு தங்களின் மொபைல் நம்பரை கேட்டு ட்வீட் செய்துள்ளது. அவரது பதிவிற்கு நடிகர் மாரிமுத்து என்ற பெயருடைய ட்விட்டர் ஐடியிலிருந்து நம்பர் பதிவிடப்பட்டிருக்கிறது. இது அவருடைய ஒரிஜினல் ஐடியா இல்லை ஃபேக் ஐடியா என்பது கூட ஆராயாமல் நெட்டிஷன்கள் மாரிமுத்துவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Marimuthu

இது சமூகவலைதளங்களில் பேசுபொருளாகி வந்த நிலையில், இதற்கு மாரிமுத்துவின் மகன் அகிலன் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அந்தப் பதிவில், ‘கமெண்ட் செய்திருப்பது எனது தந்தையின் அக்கவுண்ட் கிடையாது. அவரின் போன் நம்பர் பெரும்பாலானோருக்கு தெரியும். அதனால் யாரோ அதனை தவறாக பயன்படுத்தியிருக்கின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார் அவரின் இந்த விளக்கத்துக்கு பின்னர் அந்த போலி பதிவு டெலிட் செய்யப்பட்டு உள்ளது.

From Around the web