ஷாரூக்கான் படத்தில் இருந்து விலகினார் நயன்தாரா..?

 
நயன்தாரா
அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் இந்திப் படத்திலிருந்து நடிகை நயன்தாரா விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் நடித்துள்ளார். இதுவரை அவர் இந்தியில் நடித்ததில்லை. அங்குள்ள முக்கிய ஹீரோக்களுடன் நடிக்க வந்த வாய்ப்பையும் அவர் மறுத்துவந்தார்.

இந்நிலையில் அட்லீ இயக்கி வரும் ‘லயன்’ என்கிற படத்தில் ஷாரூக்கான் நடித்து வருகிறார். இதில் சமந்தா கதாநாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் நயன்தாரா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, புனேவில் நடந்த படப்பிடிப்பிலும் அவர் கலந்துகொண்டார்.

இதற்கிடையில் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் போதை வைத்திருந்த குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார். இதனால் கலக்கத்தில் இருக்கும் ஷாரூக்கான் படப்பிடிப்பில் எதுவும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் அந்த படத்தில் இருந்து நடிகை நயன்தாரா விலகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கான பின்னணி குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதுதொடர்பாக நயன்தாரா தரப்பு விரைவில் விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web