ரோஷ்னி தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய பட வாய்ப்புகளை இழந்தாரா ?

 
1

‘பாரதி கண்ணம்மா’ தொடரில் கண்ணம்மாவாக நடித்து, தமிழ் மக்களின் மனதைக் கொள்ளையடித்தவர் ரோஷினி ஹரிப்ரியன்.இந்நிலையில் சீரியல் மிகவும் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருந்த நிலையில் ரோஷ்னி ஹரிப்ரியன் சீரியலில் இருந்து விலகினார்.

தற்போது அவரை பற்றி ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தமிழ் சினிமாவில் இரு முக்கியமான பட வாய்ப்புகளை தவிர விட்டதாகக் கூறப்பட்டு வருகிறது. 

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த செங்கேணி கதாபாத்திரம் மற்றும் சார்பட்டா பரம்பரை படத்திலிருந்து மாரியம்மா கதாபாத்திரம் இரண்டும்  மிகவும் முக்கியமான கதாபாத்திரம்.இந்த இரண்டு கதாபாத்திரங்களும் முதலில் ரோஷ்னிக்கு தான் வந்ததாகவும் அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் பிசியாக நடித்து வந்ததால் அந்தப் பட வாய்ப்புகளை தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.

1

இந்த இரு பட வாய்ப்புகளையும் அவர் ஏற்றிருந்தார் என்றால்  தமிழ் சினிமாவில் அவருக்கென்று தனியாக ஒரு மார்க்கெட் உருவாகியிருக்கும்.  


 

From Around the web