இவர்கூடவா சிம்பு படம் பண்றாரு..? ரசிகர்களுக்கு கிடைத்த சர்பரைஸ் செய்தி..!

 
இவர்கூடவா சிம்பு படம் பண்றாரு..? ரசிகர்களுக்கு கிடைத்த சர்பரைஸ் செய்தி..!

மாநாடு, பத்துதல உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகர் சிம்புவின் அடுத்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் ‘மாநாடு’ படத்தில் நடிகர் சிம்பு பரபரப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு தயாரிக்கிறார். அதை தொடர்ந்து ‘பத்து தல’ என்கிற படத்தில் அவர் நடிக்கிறார். இதில் அவருடன் கவுதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா மற்றும் கார்த்திக் டயல் செய்த எண் ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் கவுதம் - சிம்பு கூட்டணி இணைகிறது. இதுகுறித்த அறிவிப்பு வெளியான நிலையில் படத்தின் தலைப்பு, ஷூட்டிங் உள்ளிட்ட விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளன.


இந்நிலையில் தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான ரவீந்திரன் சிம்புவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், 

“பார்த்தா தெரியாது நட்பு
பழகினால் தான் தெரியும் நட்பு
இவர் மேல சில பேருக்கு வெறுப்பு
அதற்கு அவர் இல்லை பொறுப்பு”

ஆகிய பஞ்ச் வசனங்களுடன் பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம் சிம்புவும் ரவீந்திரனும் பொதுவான விஷயங்களுக்காக அவ்வப்போது சந்தித்து வந்துள்ளனர். ஆனால் தங்கள் இரண்டு பேரை குறித்து தான் சமூகவலைதளங்களில் அதிகமாக பேசி வருகின்றனர் என்று ரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் மூலம் சிம்புவின் அடுத்த படத்தை லிப்ரா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

From Around the web