தளபதியின் லியோ பட பாடலில் கை வைத்ததா சென்சார் போர்டு..?

 
1

விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 19 ஆம் தேதி லியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. முன்னதாக படத்திலிருந்து முதல் பாடலாக நா ரெடி என்ற பாடல் வெளியிடப்பட்டு இருந்தது.

லியோ படத்தில் இடம்பெற்றுள்ள நா ரெடி பாடலின் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த பாடலின் சில வரிகளை சென்சார் போர்டு நீக்கியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம் சர்ச்சை வருவதற்கு முன்பு பாடல் வரிகளை சென்சார் போர்டு ஏன் நீக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதில் இடம்பெற்றிருந்த பத்தாது பாட்டில் நான் குடிக்க அண்டாவை கொண்டுவா சியேர்ஸ் அடிக்க என்ற வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இதேபோன்று மில்லி உள்ளே போனா கில்லி வெளியே வருவான் என்ற வரியும் மதுப்பழக்கத்தை ஊக்கப்படுத்துவது போல் இருப்பதாகவும், இதனை முன்னணி நடிகர் சொல்வது ஏற்க முடியாது என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் சென்சார் போர்டு நான் ரெடி பாடலில் பத்தாது பாட்டில் நான் குடிக்க அண்டாவை கொண்டுவா சியேர்ஸ் அடிக்க என்ற வரியை நீக்கியுள்ளது. 4.17 நிமிடங்கள் கொண்ட இந்த பாடலில் 32 வினாடிகள் காட்சிகள் நீக்கப்பட்டள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.


 


 

From Around the web