பெயரை மாற்றினாரா த்ரிஷா..?

 
பெயரை மாற்றினாரா த்ரிஷா..?

தமிழ் சினிமாவில் 17 ஆண்டுகாலம் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டதாக வெளியான செய்திக்கு அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.

கடந்த வாரம் ஓ.டி.டியில் வெளியான படம் ‘பரமபதம் விளையாட்டு’. இதில் நடிகை த்ரிஷாவின் பெயர் ‘த்ர்ஷா’ என்று போடப்பட்டுள்ளது. இதனால் அவர் தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்ட போது “ என் பெயருக்கு என்ன குறைச்சல். த்ரிஷா என்று அழகான பெயர் இருக்கையில் எதற்கான அந்த பெயரை மாற்ற வேண்டும்? இதுபோன்ற வதந்தைகளை என்னுடைய அபிமானிகள் விரும்பமாட்டார்கள்” என்று பதில் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக கோலோச்சி வரும் த்ரிஷா, தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகுகளில் இணைந்து நடிக்காதே நடிகர்களே கிடையாது. தற்போதும் அவர் ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் பல்வேறு படங்களை கை வசம் வைத்துள்ளார்.

த்ரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. மேலும் மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

From Around the web