மன்சூர் அலி கானை மன்னித்தாரா நடிகை திரிஷா..?
Nov 25, 2023, 06:05 IST
கடந்த சில தினங்களாக திரிஷா பற்றி நடிகர் மன்சூர்அலிகான் பேசிய ஆபாச பேச்சு சர்ச்சையாகி வந்தது. மன்சூர்அலிகான் மீது போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் அவர் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இதையடுத்து மன்சூர் அலிகான் இன்று திரிஷா விடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “ஆம்!! அடக்க நினைத்தால் அடங்கமறு!! இப்ப சொல்கிறேன். என்னை மன்னித்துவிடு! ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி? பெற்றுவிட்டேன்.
எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக!! ” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகை திரிஷா தனது சமூக வலைதளத்தில், “தவறு செய்பவன் மனிதன். அதை மன்னிப்பவன் தெய்வம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் திரிஷா, மன்சூர் அலிகானை மன்னித்துவிட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
To err is human,to forgive is divine🙏🏻
— Trish (@trishtrashers) November 24, 2023