இந்தியன் 2 படத்தில் விவேக் காட்சிகள் முடிக்கப்பட்டதா..?

 
இந்தியன் 2 படத்தில் விவேக் காட்சிகள் முடிக்கப்பட்டதா..?

கமல்ஹாசனுடன் முதன்முறையாக இணைந்து நடிகர் விவேக் நடிப்பதாக இருந்த இந்தியன் 2 படத்தில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டதா என்கிற கேள்வியை பல ரசிகர்கள் சமூகவலைதளங்களில் முன்வைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள், இளம் நடிகர்கள் மற்றும் வளரும் நடிகர்கள் படங்களில் உடன் நடித்த விவேக், தன்னுடைய 32 ஆண்டு கால சினிமா வாழ்வில் கமல்ஹாசனுடன் மட்டும் நடிக்காமல் இருந்தார். இந்த ஆதாங்கத்தை பலமுறை பல்வேறு மேடைகளிலும் நடிகர் கமல்ஹாசனின் முன்னிலையிலும் வெளிப்படுத்தியுள்ளார் விவேக்.

அவருடைய பல வருட ஆதாங்கத்திற்கு விடை சொல்வதாக அமைந்த படம் தான் இந்தியன் 2. இந்த படத்தில் அவர் நடிப்பதாக செய்திகள் வெளியான போது, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ”நிகழும் வரை சொப்பனம், நிகழும் போதோ பக்குவம். 32 ஆண்டுகள் தந்த நிதானம். முழுமையான ஈடுபாட்டுடன் உழைப்பதே இக்கணல் பிரதானம். எப்போதும் போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். கமல் சார்க்கு என் அன்பு, ஷங்கர் அவர்களுக்கு என் அன்றி. லைக்காவுக்கு என் வாழ்த்துக்கள்” என்று ட்வீட் வெளியிட்டு தகவலை உறுதி செய்தார் விவேக்.

எதிர்பாராத விதமாக இந்தியன் 2 ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் மீண்டும் படப்பிடிப்பை துவங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. அதற்குள் நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரழந்துவிட்டார். இதனால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் இந்தியன் 2-வில் படமாக்கப்பட்டுவிட்டதா? டப்பிங் பேசி முடிக்கப்பட்டுவிட்டதா? என்கிற கேள்வியை ரசிகர்கள் முன்வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் எதுவும் தகவல் வெளியிடவில்லை. அவருடைய காட்சிகள் படமாக்கப்பட்டு டப்பிங் முடிக்கப்படாமல் இருந்தால் பிரச்னையில்லை. ஆனால் அவர் சம்மந்தப்பட்ட மீதி காட்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றால் சிக்கல் தான். இதை படக்குழு எப்படி கையாளப்போகிறது என்று தெரியவில்லை. விரைவில் இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் ஏதேனும் முக்கிய தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web