அப்படியே காப்பியடிச்சிட்டியே லோகி ? ‘ரஜினி லுக் டெஸ்ட்டை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!

 
1

ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகயிருக்கும் திரைப்படம் ‘கூலி’. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உட்பட சில பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சற்றுமுன் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளத்தில் ‘கூலி’ படத்தின் ரஜினிகாந்தின் லுக் டெஸ்ட் குறித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான வாழ்த்துக்களும் சில கேலி, கிண்டல் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

‘கூலி’ படத்தில் ரஜினியின் லுக், ’காலா’ படத்தில் இருப்பது போலவே இருப்பதை எடுத்து சில நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர். ‘காலா’வை அப்படியே காப்பியடிச்சிட்டியே லோகி என சில கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. ஆனால் அதே நேரத்தில் ரஜினியின் லுக் அட்டகாசமாக இருப்பதாகவும் 1000 கோடி ரூபாய் வசூல் நிச்சயம் என்றும் பல ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


 

From Around the web