சாப்பிட போனது ஒரு குத்தமா..? நடிகர் மனோபாலா ட்வீட்

 
1

கூடலூர் பகுதியில் சினிமா படப்பிடிப்பு காரணமாக நடிகர்கள் மனோபாலா, ரவிமரியா இருவரும் அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்தால் கர்நாடகா, கேரளா , தமிழகம் உள்ளிட்டட மாநிலங்களில் ஊரடங்கு, ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனால் அவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர மாநில அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு ராஜகோபாலபுரம் என்ற இடத்தில் நடிகர்கள் மனோபாலா, ரவிமரியா இருவரும் நடந்து சென்றனர். இந்த வீடியோ வைரலானது. அவர்கள் இருவரும் உணவகங்களை தேடி அலைந்ததாக நாளிதழில் செய்தி வெளியானது.அதில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி இருவரும் சாலை உலா வருவதால் செய்திகள் பரவின.

இதனையடுத்து அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த நடிகர் மனோபாலா ‘சும்மா சாப்பிட போனது ஒரு குத்தமா’ என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார்.


 

From Around the web