லோகேஷ் கனகராஜ் வாக்களித்த செல்பியில் இதை கவனித்தீர்களா..?

 
லோகேஷ் கனகராஜ் வாக்களித்த செல்பியில் இதை கவனித்தீர்களா..?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் யாருக்கு வாக்களித்திருப்பார் என்பதை, வாக்களித்து விட்டு சமூகவலைதளத்தில் பதிவிட்ட செல்பி மூலம் சில யூகக் கதைகளை நெட்டிசன்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் பொதுமக்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் தங்களுடைய வாக்கினை பதிவு செய்தனர்.

சில திரை பிரபலங்கள் மற்றவர்களும் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, தாங்கள் வாக்களித்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு ஜனநாயக கடமையின் அவசியத்தை வலியுறுத்தினர்.

அந்த வகையில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தான் வாக்களித்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டார். அந்த புகைப்படம் மூலம அவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை நெட்டிசன்கள் யூகக் கதைகளை பதிவிட்டு வருகின்றனர்.

அதன்படி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிவிட்ட அந்த புகைப்படத்தில், அவருக்கு பின்னால் டிவி ஓடுகிறது. அதில் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த அப்பு கதாபாத்திரத்தில் காட்சி இடம்பெற்றுள்ளது. இதன்மூலம அவர் கமல்ஹாசன் கட்சிக்கு தான் தனது வாக்கினை பதிவு செய்துள்ளதாக நெட்டிசன்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சொந்த ஊர் கோயம்புத்தூர் மாவட்டமாகும். அவருடைய வசிப்பிடம் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதிக்குள் வருகிறது. லோகேஷ் கனகராஜ் எங்கு தனது வாக்கினை பதிவு செய்தார் என்பது தெரியவில்லை. ஒருவேளை அவர் கோயம்புத்தூரில் செய்திருந்தால், நிச்சயம் கமல்ஹாசனுக்கு தான் வாக்களித்திருப்பார் என்று தெரிவிக்கிறார்கள் நெட்டிசன் ஆய்வாளர்கள் சிலர்.  தவிர, வாக்குப்பதிவுக்கு முடிந்த பிறகு கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தில் வேலைகளை லோகேஷ் கனகராஜ் துவங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

From Around the web