சமந்தாவை குறித்து ட்வீட் செய்தேனா..? நடிகர் சித்தார்த் அதிரடி பதில்..!!

 
1

சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரிய இருப்பதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தனர். இந்தத் தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இருவரது பிரிவுக்குப் பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.

இந்த நிலையில் நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், ஆழ்ந்த பச்சாதாபம், அக்கறை மற்றும் பொய்யான கதைகள் மற்றும் பரப்பப்படும் வதந்திகளுக்கு  எதிராக என்னை பாதுகாத்த அனைவருக்கும் நன்றி. எனக்கு மற்றொருவருடன் தொடர்பு இருந்தது, நான் குழந்தை பெற மறுப்பு தெரிவித்தேன், நான் ஒரு சந்தர்ப்பவாதி, மற்றும் கருவை கலைத்தேன் என வதந்திகள் வந்தன.

விவாகரத்து மிகுந்த வலியை அளித்துள்ளது அதிலிருந்து மீள்வதற்கு எனக்கு அவகாசம் அளிக்க வேண்டும். இத்தகைய தாக்குதல்களில் இருந்து தான் தன்னை பாதுகாத்துக் கொள்வேன் என்றும் நான் உடைந்து விட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

முன்னதாக சமந்தா விவகாரத்து அறிவித்தபொழுது நடிகர் சித்தார்த், ஏமாற்றுக்காரர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள் என்ற கருத்து சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நடிகை சமந்தாவை விமரிசித்து தான் சித்தார்த் இவ்விதமாக பதவிட்டதாக சர்ச்சை எழுந்தது. ஏனெனில் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொள்வதற்கு முன் சமந்தாவும் சித்தார்த்தும் காதலில் இருந்துள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபோது பத்திரிகையாளர்கள் இதுகுறித்து கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த சித்தார்த், நான் அன்று வாழ்க்கை குறித்து இயக்குநர் அஜய் பூபதியிடம் பேசிக்கொண்டிருந்தேன். என் வாழ்க்கையில் நடந்தது பற்றி ட்வீட் செய்திருந்தேன். எங்களுக்கு வீட்டில் இருந்த வளர்ப்பு நாய்கள் பற்றி பிரச்னை இருந்தது. நான் அதுகுறித்து ட்வீட் செய்திருந்தேன். இதனை வேறுவிதமாக புரிந்துகொண்டால் நான் பொறுப்பாக முடியுமா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

From Around the web