சென்னை பள்ளியில் மகளை எல்.கே.ஜி படிக்கவைக்கும் திலீப்..!!
நட்சத்திர தம்பதிகளான திலீப் மற்றும் காவ்யா மாதவன் தங்களுடைய மகளை சென்னையில் இயங்கும் பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பில் சேர்த்துவிட்டுள்ளார்.
Jul 13, 2023, 07:05 IST
மலையாள சினிமாவின் உச்சநட்சத்திரமான திலீப், நடிகை மஞ்சு வாரியாரை பிரிந்த பின் சக நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இதுவரை மகளுடன் கேரளாவில் வசித்து வந்த திலீப் மற்றும் காவ்யா, தங்களுடைய மகளுக்கு வேண்டி சென்னைக்கு இடம்பெறவுள்ளனர். அதற்காக சென்னையில் இயங்கும் பிரபல பள்ளியில் மகளை எல்.கே.ஜி-க்கு சேர்த்துவிட்டுள்ளனர்.
அண்மையில் மலையாள நிகழ்ச்சிக்கு அளித்தி பேட்டியில், இந்த தகவலை அவர் உறுதி செய்துள்ளார். மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் உள்ளிட்டோரின் மகன்கள் எல்லோரும் சென்னையில் தான் கல்லூரி படிப்பை முடிடித்தனர்.
ஆனால் நடிகர் திலீப் தனது மகளை எல்.கே.ஜி-யிலேயே சென்னையில் கொண்டு வந்து சேர்த்துள்ளது, கேரள சினிமாவில் கவனமீர்த்துள்ளது.