ராதிகா சீரியலில் வில்லனாகும் தினேஷ் கோபால்சாமி..!!
தமிழில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம், பூவே பூச்சுடவா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தினேஷ் கோபால்சாமி. தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஈரமான ரோஜாவே’ தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ராதிகா சரத்குமார் தயாரிப்பில் உருவாகும் ‘கிழக்கு வாசல்’ தொடரில் தினேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அந்த சீரியலில் அவர் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் சிவா ஆகும். இது ஒரு வில்லன் கதாபாத்திரமாகும், அதுவும் ஒரு கேங்கஸ்டர் கும்பலுக்கு தலைவனாக அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பேசிய தினேஷ், தமிழ் சீரியல்களில் நான் எப்போதும் நல்லவனாகவே நடித்துள்ளேன். ஒரு வில்லனாக நடிக்க வேண்டும் என்பது கனவாகவே இருந்தது. அது இப்போது கிழக்குவாசல் தொடர் மூலம் நிறைவேறியுள்ளது. எப்போதுமே எனக்கு பார்வையாளர்கள் தரப்பில் இருந்து நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. அதே ஆதரவு கிழக்கு வாசல் தொடருக்கும் கிடைக்கும் என நம்புவதாக கூறினார்.
வரும் மே மாதம் இரண்டாவது வாரம் முதல் ‘கிழக்கு வாசல்’ சீரியலின் ஒளிபரப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரியல் வெங்கட் ரங்கநாதன், ரேஷ்மா முரளிதரண் ஹீரோ மற்றும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் முதன்மை கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.
இந்த சீரியலை ராதிகா சரத்குமார் தயாரிக்கும் நிலையில், அவர் இந்த நாடகத்தில் நடிக்கிறாரா என்பது உறுதியாக தெரியவில்லை.