முதல்வர் ஸ்டாலினிடம் நன்கொடை வழங்கிய இயக்குநர் அமீர்..!!

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது . புயல் ஓய்ந்து இத்தனை நாட்கள் ஆனாலும் தற்போது வரை இன்னும் சில பகுதிகளில் வெள்ளம் வடியாமலே இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காக்கவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் திரை பிரபலங்கள் பலர் களத்தில் இறங்கியுள்ள நிலையில் பல உச்ச நட்சத்திரங்கள் தங்களால் முடிந்த தொகையினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளால் கடும் அவதிக்குள்ளான மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார் இயக்குநரும், நடிகருமான அமீர்.
திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று நேரில் சந்தித்த அமீர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.
திரைப்பட இயக்குநரும், நடிகருமான திரு. அமீர் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.#CycloneMichaung pic.twitter.com/PXsgRQvpgm
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 16, 2023