இயக்குநர் அமீர் மகளான அனி நிஷாவின் திருமண விழா... குவிந்த பிரபலங்கள்..! 

 
1

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் அமீர் என்பதும் சமீபத்தில் கூட அவர் நடித்த ’உயிர் தமிழுக்கு’ என்ற திரைப்படம் வெளியானது என்பது தெரிந்தது. இந்த நிலையில் இயக்குனர் அமீர் மகள் திருமணம் மதுரையில் நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள திரையுலக பிரபலங்கள் பலர் வருகை தந்திருந்தனர்.

குறிப்பாக இயக்குனர்கள் சேரன், வெற்றிமாறன், சசிகுமார், சமுத்திரக்கனி, கரு பழனியப்பன், பிரபாகரன், சுப்பிரமணிய சிவா, பொன்வண்ணன் ஆகியோர்களும், நடிகர்கள் ஆர்யா, கஞ்சா கருப்பு, பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இயக்குநர் அமீர் மகளான அனி நிஷாவின் திருமண விழா மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை  நடைபெற்றது. இந்த திருமணம் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றதாகவும் இந்த திருமணத்திற்கு வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் புதுமனை தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன

From Around the web