முதல்முறையாக மகனின் முகத்தை காட்டிய இயக்குனர் அட்லி..!
Sep 9, 2023, 09:05 IST

இயக்குனர் அட்லி கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொலைக்காட்சி நடிகை கிருஷ்ணபிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு 9 ஆண்டுகள் கழித்து இந்த தம்பதிகளுக்கு இந்த ஆண்டு ஜனவரி 30ம் தேதி மகன் பிறந்தார்.
இந்த நிலையில் ஏற்கனவே தங்கள் மகன் புகைப்படங்களை அட்லி மற்றும் பிரியா அட்லி தங்களுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தாலும் முதல் முறையாக அட்லி தனது மகனின் முகத்தை காண்பித்து இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
❤❤❤ pic.twitter.com/DzRzp4fnCU
— Atlee (@DirAtlee) September 7, 2023