இயக்குநர் கே.வி. ஆனந்த் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..!
 

 
இயக்குநர் கே.வி. ஆனந்த் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..!

சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட கே.வி. ஆனந்த், இன்று அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 54

ஊடகப் புகைப்படக் கலைஞராக பயணத்தை தொடங்கி,  சினிமா ஒளிப்பதிவாளராக பணியாற்றி, பின்னநாளில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் கே.வி. ஆனந்த். மலையாளத்தில் வெளியான ‘தேமாவன் கொம்பத்து’ படத்தில் முதல் முறையாக ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது அவருக்கு கிடைத்தது.

அதை தொடர்ந்து தமிழில் காதல் தேசம் படத்தில் ஒளிப்பதிவு செய்த கே.வி. ஆனந்த் இதுவரை 17 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அதில் நேருக்கு நேர், முதல்வர், விரும்புகிறேன், பாய்ஸ், சிவாஜி போன்ற படங்கள் குறிப்பிடத் தகுந்தவையாகும். தமிழ் உட்பட தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடந்த 2005-ம் ஆண்டு ஸ்ரீகாந்த், கோபிகா நடிப்பில் வெளியான கனா கண்டேன் மூலம் இயக்குநரானார். அதை தொடர்ந்து அயன், கோ, மாற்றான், அனேகன், கவன், காப்பான் போன்ற படங்களை அவர் இயக்கினார். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருந்த படம் தொடர்பாக அவர் அலோசித்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கே.வி. ஆனந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அவருடைய உயிர் பிறந்தது. அவரது திடீர் மரைவு தமிழ் திரையுலகின் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நல ஆரோக்கியத்துடன் இருந்த நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த 17-ம் தேதி உயிரிழந்தார். அந்த சோகம் மறைவதற்குள் தமிழ் சினிமாவில் மற்றொரு முக்கிய ஆளுமையாக இருந்த கே.வி. ஆனந்த் உயிரிழந்துள்ள சம்பவத்தால் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.  
 

From Around the web