பிறந்தநாளன்று ரசிகர்களை ஏமாற்றிய இயக்குநர் மணிரத்னம்..!

 
மணிரத்னம்

இயக்குநர் மணிரத்னத்தில் பிறந்தநாளில் பொன்னியின் செல்வன் அப்டேட் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

தமிழ் புதினங்களில் மிகவும் பிரபலமானதாக உள்ளது பொன்னியின் செல்வன். மறைந்த கல்கி எழுதிய இந்நாவல் பல தலைமுறைகள் கடந்தும் வாசகர்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. இந்நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் பல்வேறு பிரபலங்கள் ஈடுபட்டன. நடிகர் எம்.ஜி.ஆர் பொன்னியின் செல்வன் படத்தை ஆரம்பிப்பதாக அறிவித்து பிறகு அந்த முடிவை கைவிட்டார். 

அதேபோல நடிகர் கமல்ஹாசனும் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். பிறகு சத்தமே இல்லாமல் அதனுடைய பணிகள் அப்படியே கைவிடப்பட்டன. கடந்த 2010-ம் ஆண்டு விஜய், மகேஷ் பாபு நடிப்பில் பொன்னியின் செல்வன் படத்தை துவங்க மணிரத்னம் திட்டமிட்டார். அதுவும் பட்ஜெட் காரணங்களால் கைவிடப்பட்டது.

இந்நிலையில் பாகுபலி திரைப்படம் சரித்தர கால படங்களுக்கு புதிய வாசற் கதவை திறந்துவிட்டது. இதனால் தன்னுடைய கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் படத்தை எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் தொடங்கினார் 
மணிரத்னம். விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரகாஷ் ராஜ், த்ரிஷா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்திற்குள் வந்தது. இதனுடைய படப்பிடிப்பு தாய்லாந்து, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. விரைவில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு பணிகள் மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இயக்குநர் மணிரத்னத்தின் பிறந்தநாள் என்பதால், பொன்னியின் செல்வன் அப்டேட் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் அதில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. 

From Around the web