இயக்குநர் மணிரத்னத்தை விளாசிய பொன்ராம்..!
 

 
மணிரத்னம் மற்றும் பொன்ராம்

ஆந்தாலஜி படத்தில் தன்னுடைய குறும்படத்தை காரணமில்லாமல் நீக்கியதாக மணிரத்னம் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் இயக்குநர் பொன்ராம்.

பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், மிருணாளினி ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எம்.ஜி.ஆர் மகன்’. நேரடியாக ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் தீபாவளி அன்று இப்படம் வெளிவந்துள்ளது.

இதற்கான ப்ரோமோஷன் பணிகள் சென்னையில் நடந்தது. அப்போது படத்தின் இயக்குநர் பொன் ராம் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் நெட்ஃப்ளிக்ஸின் நவரஸா ஆந்தாலஜி படத்தில் இருந்து வெளியேறியது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த பொன்ராம், நவரஸாவுக்காக கவுதம் கார்த்தியை வைத்து நகைச்சுவை கதையை நான் இயக்கி இருந்தேன். அந்த படத்தில் ஆடியோ சரியில்லை என்று கூறி மணிரத்னம் படத்தை நீக்கிவிட்டார். அது எனக்கு திருப்பதிகரமான பதிலாக தெரியவில்லை. நெட்ஃப்ளிக்ஸுக்காக உருவாக்கப்பட்ட கதை என்பதால், வேறு எந்த தளத்திலும் படத்தை வெளியிட முடியவில்லை என்று அவர் குற்றச்ச்சாட்டை எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் மணிரத்னம் மீது பொன்ராம் வைத்துள்ள இந்த குற்றச்சாட்டு கோலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இதுதொடர்பாக மணிரத்னம் அல்லது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web