உதயநிதிக்கு வாழ்த்து கூறிய இயக்குனர் மாரி செல்வராஜ்! 

 
1

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதனம் குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு பாஜக உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு இன்னொரு பக்கம் ஆதரவும் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பாக திரையுலகில் உள்ள பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைத்தளத்தில் ’மாமன்னன்’ படத்தின் கடைசி காட்சியை வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில் உதயநிதி ’என்ன பாக்குற, இனிமே உன் உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் யாரும் பயப்பட போவதில்லை, இதுக்கு அப்புறமும் துப்பாக்கி தூக்கி மிரட்டின கூட, அவன் அவன் அவனோட திசையை பார்த்து ஓடிகிட்டு தான் இருப்பான், புரியுதா என்று கேட்கும் காட்சி அதில் உள்ளது.

இந்த காட்சியின் வீடியோவை வெளியிட்டுள்ள மாரி செல்வராஜ், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா, செய்தொழில் வேற்றுமை யான்” என்ற திருக்குறளையும் பதிவு செய்து வாழ்த்துக்கள் அதிவீரன் , உதயநிதி சார் என்று பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


 

From Around the web