பிரபல சீரியல் இயக்குநரின் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!

பிரபல தொலைக்காட்சி தொடர் இயக்குநர் ஓ.என். ரத்தினத்தின் மனைவி ப்ரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரித்து வருகிறது.
 
ON Rathinam

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி, ப்ரியமான தோழி மர்றும் பாண்டவர் இல்லம் போன்ற தொடர்களை இயக்கி வருபவர் ஓ.என். ரத்தினம். இவருக்கு ப்ரியா என்கிற மனைவியும் ஓரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.

இயக்குநர் ரத்தினத்தின் சொந்த ஊர் பொள்ளாச்சி. அவருடைய மனைவி ப்ரியாவுக்கும் அதே ஊர் தான். முழு ஆண்டு விடுமுறை காரணமாக பிள்ளைகள் இருவரும் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அப்போது கணவன் மனைவிக்கு இடையே சண்டை வந்துள்ளது.

கடண்ட 24-ம் தேதி குழந்தைகளை ஊரில் இருந்து அழைத்து வர பேருந்து நிலையத்துக்கு சென்றுள்ளார் ரத்தினம். அப்போது வீட்டில் தனியாக இருந்த ப்ரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ரத்தினம் வீட்டுக்கு வந்த பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பிரியாவின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இயக்குநர் ஓ.என். ரத்தினத்தின் மனைவி ப்ரியா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சின்னத்திரையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web