இயக்குநர் பா. ரஞ்சத்தின் அடுத்த பட ஹீரோ இந்த ஒளிமயமான நடிகரா..?

 
பா. ரஞ்சித்

ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் சார்பாட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வடசென்னையை மையமாக வைத்து இயங்கி வந்த குத்துச்சண்டை வீரர்களை பற்றி இயக்குநர் பா. ரஞ்சித் உருவாக்கி வரும் படம் ‘சர்பாட்டா பரம்பரை’. இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். 

1980-களில் காலக்கட்டத்தில் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் குத்துச்சண்டை விளையாட்டு எவ்வாறு வளர்ச்சிப் பெற்றது, அவர்களுடைய பண்பாட்டுடன் அது எப்படி இணைந்தது குறித்த பார்வையை இந்த படம் முன்வைக்கிறது.

தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் அடுத்து இயக்கவுள்ள படம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி நடிகர் சூர்யாவின் படத்தை பா. ரஞ்சித் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. தற்போது அதற்கான கதை விவாதம் நடந்து வருகிறது. விரைவிலேயே இதுகுறித்த முக்கிய அறிவிப்பு வெளிவரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

From Around the web